”நான் பாட்டுக்கு சொல்லிகிட்டே இருக்கேன், காது குடுத்து கேக்காம நீ பாட்டுக்கு செஞ்சுகிட்டே இருந்தின்னா என்ன அர்த்தம்... “ இது ஒரு குடும்பத்தில் மிகச்சாதரணமாக நிகழும் சச்சரவுகளில் கேட்கப்படும் வசனம்... பெரும்பாலும் அக்குடும்பத்தில் உள்ள குழந்தையை , தாயோ அல்லது தந்தையோ அல்லது வேறு ஒரு குடும்ப உறுப்பினரோ சொல்வதாக அமையும்... விமர்சனங்கள் என்பது இங்கிருந்தே உருவாகி விடுகிறது... இது ஒரு குழந்தையின் நடத்தையை விமர்சனம் செய்வது.. அதற்க்கு அவர்களுக்கு உண்டான தகுதி அதற்கு முன் இந்த உலகத்தில் அந்த குழந்தை வாழ்ந்த சமூக கலாச்சார சூழலில் 25 வருடங்கள் வாழ்ந்தது,பலவித அனுபவங்களை பெற்றது இதெல்லாம்தான்.
இங்கு நாம் மிக முக்கியமாக கருத வேண்டியது மாறிவரும் சமுகச்சூழல்களைதான். அதை எதிர்கொள்ளப்போவது அந்த குழந்தைதானேயொழிய நாமல்ல. இன்றய காலகட்டத்தில் தொன்னுறு சதவிகித பெற்றோர்கள் கால ஓட்டத்தில் சமுகமாற்றத்திலிருந்து விலகும் தன்மையுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அக்குழந்தை எந்த அளவுக்கு சமுகத்தை நெருங்குகிறதோ , சில பெற்றோர் அந்த அளவுக்கு விலகியும் போகிறார்கள். அவ்வாறு அந்த குழந்தை இந்த சமுகத்தை நெருங்குவதற்கான காலம் எது என்று கேட்டால்.டீன் ஏஜ் எனப்படும் பதின் பருவ வயதில்தான்.
முக்கியமாக பல விமர்சனங்கள் இந்த வயதில் முன் வைக்கப்படும். இவ்வாறு விமர்சனம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை இரு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று சமூக மாற்றங்களை புரிந்து கொண்டவர்கள் இன்னொன்று சமூக மாற்றமடைகிறது என்ற பிரஞ்ஞயே இல்லாதவர்கள். (ஒருவகையில் இவர்கள் வாழ்வதும் கற்பனை உலகில்தான்).இவர்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப்போவதில்லை. நாம் பார்க்கப்போவது சமூக மாற்றங்களை புரிந்து கொள்பவர்க்ள் பற்றயே...
சரி எந்தமாதிரியான மாற்றங்கள்...
1.பொருளாதார மாற்றம்
2.ஆணாதிக்க மனபான்மையின் பரினாம வளர்ச்சி
3.விஞ்ஞான வளர்ச்சி
இக்கால பெற்றோரும் கூட இவற்றையெல்லாம் மறுப்பவர்களா..? என ஒரு கேள்வி எழலாம்... என்னுடய பதில்.ஆம் என்பதே.மறுக்கும் முறையோ அல்லது மறுக்கப்படும் விஷயங்களோ மாறி இருக்கலாம் ,ஆனால் மறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். சரி
1. ஒரு குழந்தை புத்தகத்தை கிழித்தால் கண்டிக்க கூடாதா என்றால் தாராளமாக... கண்டிக்க வேண்டிய விஷயம் , ஆனால் நாம் கண்டிக்கும் முறை “சாமி கண்னை குத்தும்..” என்பதாகவே அமையும். அந்த புத்தகத்தை படித்தால்தான் வேலைசெய்து சம்பாதிக்க முடியும் என்பதை அந்த குழந்தைக்கு புரிய வைப்பதில்லை.. மாறாக குழந்தைக்கு அதெல்லாம் புரியாது என்று நாமே ஒதுக்கித்தள்ளிவிடுகிறோம்.
2.பத்து வயதில் பரிட்சையில் மதிப்பென் குறைவாக எடுத்தாலோ அல்லது தோல்வியை சந்தித்தாலோ ஒன்று கண்டிக்கிறோம் அல்லது அடிக்கிறோம் இல்லை அடுத்த பரிட்சையில் ”நல்ல மார்க் வாங்கனும் என்று சொல்கிறோம்” அவ்வளவே.மதிப்பென் வாங்குவது இன்றய கல்வி திட்ட அமைப்பின் படி அடுத்த படியான வாழ்வியல் முன்னேற்றத்திற்க்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை கூறுவதில்லை.. மாறாக குழந்தைக்கு அதெல்லாம் புரியாது என்று நாமே ஒதுக்கித்தள்ளிவிடுகிறோம்
3.பதிமூன்று வயதில் ஒரு குழந்தை சமுகத்தை நம்மைவிட வேகமாக நெருங்கும்பொழுது. அந்த வேகத்தை தடுக்க முயல்கிறோமே தவிர அது அவசியமான வேகமா இல்லையா என்பதை உணர மறுக்கிறோம். கேட்டால் இது ரெண்டுங்கட்டான் வயசு என்று நாமே ஒதுக்கித்தள்ளிவிடுகிறோம்.
பதிமூன்று வயது என்பது வாழ்வியல் உண்மைகளை தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கும் வயது. இனப்பெருக்கத்திற்க்கு தயாராகும் வயது. இந்த வயதில் உன்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆண்களின் நிலை மிக மோசம் , பெண்கள் எவ்வளவோ தேவலாம் போல. பெண்னுக்கு அவள் தாய் எல்லம் சொல்லிகொடுக்கிறாள் வெளியே எப்படி செல்லவேண்டும் என்பதிலிருந்து குடும்பம் குழந்தை குட்டி பொறுப்பு வரை கிட்டதட்ட எல்லாமே பதிணெட்டு வயதிற்குள் தெரிந்து விடுகிறது. அவள் பூரனமாக பக்குவம் அடைந்து விடுகிறாள்.. ஆண்களாகிய நாம்...?
கிட்டதட்ட நாம் எல்லோருமே பெண்களை ஒப்பிடுகையில் நாகரீக வளர்ச்சியில் பிந்தங்கியுள்ளதை மறுக்க முடியாது.. (உடனே ஆண்கள் சண்டைக்கு வரக்கூடாது , பெண்களை உசத்தி கூறூகிறேன் என்று... ) ஒரு கோணத்தில் இந்த பக்குவப்பட்ட அறிவு அவளுக்கு அவசியமாகிறது ஏனென்றால் பொருளாதாரம் , அரசியல் , கல்வி என்று எல்லா துறைகளிலும் ஆணாதிக்கமே நிரம்பி இருக்கிறது கல்வி அறிவு இல்லாத பெண்னாக இருந்தாலும் ஆணைவிட அவளுக்கு வாழ்வியல் உண்மைகள் அதிகம் தெரிந்திருப்பதற்க்கு இந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பும் ஒரு காரணம் (உடனே ஆண்கள் பெருமைப்பட்டு கொள்ளவேண்டாம், அதே சமுதாய அமைப்பு ஆண்களை எங்கே கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது என்று இப்பொழுதுதான் பார்த்தோம்...)
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு
"child is a father of a man' என்பார்க்ள். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு அவர்களை ஒவ்வொரு வயதிலும் மதித்து நல்லவைகளையும் கெட்டவைகளையும் பிரித்து பகுத்து அறிய கற்றுகொடுத்தோமானால். நமது மரபனு இந்த சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவதோடு மட்டுமல்லாமல். அடுத்த சந்ததிகளை சரியான பாதையை நோக்கி இட்டுச்செல்லும்.
"after all we all are the prisoners of solar system"