Sunday, September 29, 2013

the identity crisis

என்னிடம் விவாகரத்துக்காக ஒரு வழக்கு வந்தது . வழக்கை நான் பார்த்துக்கொள்கிறேன் அவள் கேள்விக்கு உங்களிடம் பதில் இருந்தால் சொல்லுங்கள்..

“என்னுடையது காதல் திருமணம் , கல்லூரி காலத்தில் இருவரும் காதலித்தோம் . நிறைய போராட்டாத்திற்க்கு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது. என் கணவர் வீட்டுக்காரர்களோ என் அப்பாவோ ரொம்ப நல்லவர்கள்.ஆனால் அவர்கள் செய்ய வேண்டும் என நான் நினைத்த எதையும் அவர்கள் செய்யவில்லை. இது உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம். அதனால் நாமே கேட்டு இன்சல்ட் ஆவதை விட நடப்பது நடக்கட்டும் என்று விட்டிருந்தேன் (அது தவறோ..?).
“இருவரும் வெவ்வேறு மதம் , நான் மதம் மாறினேன் . பக்தி என பெரிதும் இல்லாததால். இப்போது ஏன் புலம்பல் என கேட்கத் தோன்றுகிறது அல்லவா..?. காதலுக்கும் கல்யாணத்திற்க்கும் இடைப்பட்ட்ட போராட்ட காலம் நீண்டிருந்தது. ஊர் பேச ஆரம்பித்தது , என் காதலை அசிங்கப்படுத்தி. பெண் அல்லவா .. ? என் கற்பு .. ? அப்படித்தானே சொல்கிறது ..? ஆக இந்த சமூகம் என்னை மதம் மாற்றியது.

கல்யானம் என ஏதோ ஒன்று நடந்தால் போதும் என நினைக்க வைத்து விட்டார்கள். என் அப்பா செலவில் நிச்சயதார்த்ததும் திருமணமும் நடந்தது.

பிறகு குழந்தை. என் அப்பா வீட்டிற்க்கு சென்றேன் , அப்பா காசில் பெற்றெடுத்தேன். மாமி வந்து தன் புருஷன் பெயரை குழந்தைக்கு சூட்டினாள்.
பிள்ளை பேறு முடிந்து திரும்ப ஒரு வருடம் ஓடிப்போயிருந்தது. குழந்தையை வளர்க்க வேண்டுமென்பதால் வேலையை விட்டேன் . ஐந்து வருடங்கள் ஓடிப்போயிருந்தது . என் கணவர் நல்லவர் . என் செலவு பணத்தில் கை வைக்க மாட்டார்.ஆனால் அவராகவே எனக்கு செலவு செய்ய வேண்டும் என எனக்கு தோன்றும். எனெனில் இந்த குழந்தை என் குழந்தை அல்ல , எங்கள் குழந்தை.குழந்தையை ஒரு பெந்தான் பெற முடியும் என்பதால் அந்த பொறுப்பு பெண்னாகிய எனக்கு. இந்த பொறுப்பை தான் ஏற்றதால் , சம்பாதிக்கும் பொறுப்பு கணவருக்கு.

ஆனால் உண்மையில் ஒவ்வொன்றிற்க்கும் அவரிடம் காசு கேட்க சங்கடமாய் இருக்கும். அதனால் வீட்டிலேயே சின்ன சின்ன ஆன்லைன் வேலைகள் செய்து சம்பாதிப்பேன்.

குழந்தை ஓரளவிற்க்கு வளர்ந்தபின் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். குழந்தையை ,  கணவனை  தயார் படுத்திவிட்டு , மாமனாரிற்கு சமையல் செய்துவிட்டு ஓடுவேன். பஸ்சில் பிகர் என சொல்லும் வார்த்தைக்கு பயந்து மூடி மூடி இழுத்துவிட்டபடி ஓடுவேன். பெண்ணுக்கும் வியர்க்கும் உடல் நாற்றமெடுக்கும் . மூடி மூடி அக்கி வந்தது...

இதில் மாதாந்திர இழவுகள் வேறு..

“மூன்று வருட ஓட்டத்திற்க்கு பின் அலுவலகத்தில் ஒரு விழாவில். என் சர்வீசை மதிக்கும் பொருட்டு ஒரு அவார்டு. .. விழாதலைவர் சொல்கிறார்...
” ஆணுக்கு சமமாக...” ...

“எப்படி இருவரும் சமமாக இருக்க முடியும்..?”

“என் குழந்தை வளர்ந்து இதோ இப்போது கல்லூரியில்...”

இன்னும் இங்கியேயே இருந்தால் , இவர் பெற்றோருக்கு சமைத்து , இவருக்கு சமைத்து வீடு கூட்டி , என் தேவைக்கு சம்பாதித்து..

“எவனாவது வாலாட்டினால் நானாக அதை சமாளிக்க வேண்டி இருக்கிறது . இந்த லட்சனத்தில் குடும்பம் எங்கே எனை பாதுக்காக்கிறது ?

இனி நான் நானாக இருக்கப்போகிறேன் .. இத்தனைக்கும் என் புருஷன் , குடும்பம் , ஊரைப்பொருத்தவரை என்னை தாங்க்குகிறார்கள்..

போதும் ஒருவராவது ஓட்டத்தை நிறுத்தினால்தான் இவர்களுக்கு புரியலாம்.
ஆணும் பெண்ணும் எப்படி ஐய்யா சமமாகும்....?

       - a divorce case due to indentity crisis published in theekathir - vannakathir on sunday 29/10 by hansa