Friday, September 23, 2016

ஆண்டவன் கட்டளை திரைப்படப்பார்வை :



விஜய் சேதுபதி மேலும் ஒரு தரமான படத்தில் நடித்திருக்கிறார்!! இது போன்ற கதைகள் அவரை தேடி வருகின்றனவா இல்லை அவர் இது போன்ற கதைகளை தேடி போகின்றாரா தெரியவில்லை . ஒன்று மட்டும் நிச்சயம் இந்த நல்ல பயணத்தை பாழடிக்க கோடம்பாக்க பண்டிதர்கள் ஆன மட்டும் முயலுவார்கள் என்பதில் மட்டும் ஐயமில்லை. கதைக்கு வருவோம். கதாபாத்திரத்தின் பெயரிலேயே கதையின் கரு அடங்கியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. படத்துக்கு "காந்தி படும்பாடு" என்று கூட பெயர் வைத்திருக்கலாம் போல. நேர்மையும் உண்மையும் ,சோதனைக்குள்ளாக்கப்படுவதை இதுபோல் நகைச்சுவையாக சொல்வது மிகக்கடிணம். நம்மை சுற்றி இருக்கும் உலகம் பொய்க்ளையும் போலித்தனத்தையும் வெற்றியை ஈட்டும் கருவிகளாக காண்பிக்கும் போது காந்தியே ஆனாலும் பணிந்துபோக வேண்டிய சூழலை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய மணிகன்டனுக்கு பாராட்டுகள். ஒவ்வொரு முறையும் நேர்மை சோதனைக்கு உள்ளாக்கப்படும்போதும் , போலித்தனத்தை பயன் படுத்தி தற்காலிக வெற்றிகளை ஈட்டும்போதும் காந்தியின் மனசாட்சி படும் வேதனை பல வசனங்களில் மிகத்தெளிவாக தெரிகிறது. இந்த மனச்சிக்கலில் இருந்து வெளியே வர அவர் அவ்வபொழுது கூறும் உண்மைகள் நிலமையை மேலும் சிக்கலாக்கும் தருணங்களை நகைச்சுவையுடன் காட்டிய விதம் மிக அருமை.
       மதுரைப்பக்கம் கிராமப்புரத்தில் வீடு விவசாயம் என்றிருக்கும் ஒருவன் கடண் தொல்லையால் வேளிநாடு சென்று சம்பாதிக்க நினைக்கிறான். அரசாங்கத்தை ஏமாற்றி சென்றால்தான் மிக சுலபமாக சம்பாதிக்க முடியும் என்று கிடைத்த அறிவுரையின் பேரில் , சட்டத்திற்க்கு புறம்பாக அவன் செய்யும் காரியங்கள் அவனை சிக்கலில் கொண்டு விடுகிறது. அதனின்று வெளிவருவதற்க்கு எடுக்கும் முயற்ச்சிகள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது . இறுதியில், என்ன ஆனாலும் பரவாயில்லை பொய்யை கூறி மாட்டிக்கொள்ளும் சிக்கல்களை விட உண்மையை கூறி பின்வரும் விளைவுகளை சந்திப்பது மேல் என முடிவெடுக்கும் கதாநாயகன் காந்தியின் கதைதான் ஆண்டவன் கட்டளை.

உண்மை , போலித்தனம் இவ்விரண்டையும் சமூகமே போதிக்கிறது. எதார்த்தம் என்று போலித்தனத்தை வேறு வார்த்யில் புகட்டும் சமுகம். பல சமயங்களில் நேர்மையின் இருப்பையே கேள்வி கேட்க வைத்துவிடுகிறது. நேர்மை என்ற ஒன்று இருப்பதாக நாம் உணர்வதற்க்கு முன்னமே போலித்தனமும் , பொய்களும் நம்மில் பலரின் வாழ்க்கையை ஆக்கிரமித்து விடுகிறது. நேர்மைக்கு சான்றாக யாரவது தோன்றினால் கூட அவர்களை ஏளணமாகவும் , பயத்துடனும் பார்க்க சொல்லி கொடுக்கும் சமூகம் போலித்தனத்திற்க்கு சாண்றாக விளங்குபர்களை சற்றே தைரியத்துடனும் , எதார்த்ததன்மை மிகுந்தவர்களாகவும் காட்டும் மாயையை  என்னவென்று சொல்வது ??!!! இம்மாயையினின்ரு விடுபடுவது காந்திக்கே (மோகன்தாஸ் கரம்சந்த்) பெரும்பாடாக இருந்த போது , நம்மைபோன்ற சாமானியர்கள்,எந்த அரசியல், பண பின்புலமும் இல்லாதவர்களுக்கு இது ஒரு மணசிக்கல்தான் என்ப்தை இயக்குனர் ,கதாசிரியர் தெளிவாக கண்முன் காட்டியுள்ளனர்.
     
    படத்தின் ஒரு தூன் விஜய் சேதுபதி என்றால் , இன்னொரு தூன் ரித்திகாசிங் . எங்கயோ பாத்தமாதிரி இருக்கே ?? ஆம் , இறுதிச்சுற்றில் பார்த்து இருக்கிறோம் இம்முகத்தை. என்ன ஒரு நடிப்பு. அமைச்சரை கேள்வி கேட்பதிலிருந்து தொடங்கி , டேக் ஹோம் 33,083 என்று பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் சொல்வது வரை மிக தைரியமான பெண்னாக , டீ வி நிருபராக வரும் கார்மேகக் குழலி , இல்லை இல்லை ரித்திகாசிங் , நடிப்பில் அசத்தி இருக்கிறார். விஜய் சேதுபதி அவரிடம் காதலை சொல்லும் காட்ச்சியில் மட்டும்  நடிப்பு கொஞ்சம் செயற்க்கையாக , இயக்குணர்  சொல்லிகொடுத்து வந்தது போல் உள்ளது. இறுதி சுற்றில் மாதவனிடம் காதலை சொன்னது போல் , இதிலும் எதார்த்தமாக ,  சொல்லிக்கொடுக்காமல் அவராகவே நடிக்க விட்டிருக்கலாம். இது போன்ற பெண் கதாபாத்திரங்களை மேலும் நிறைய படத்தில் பார்க்க வேண்டும்.  நகைச்சுவ/சீரியஸ் கதைகளின் மையமாக  பெண்களை மட்டுமே வைத்து கதை பண்னும் திறன் , மணிகன்டன் , சுப்புராஜ் , நலன் போன்ற இளம் இயக்குணர்களுக்கு உள்ளது.
 படத்தில்  வரும் அத்தனை கதாபாத்திரங்களும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள் குறிப்பாக யோகிபாபு , ஹரிஷ் பெரடி ஆகியோரை சொல்லலாம். படத்தின் திரைக்கதையில் , வீடு தேடும் படலம் , பெண் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், திருமணம் , விவாகாத்து  குறித்த காட்சிகள் , வசனங்கள் என ரசிப்பதற்க்கான விஷயங்கள் ஏராளம் . பாடல்களும் பின்னனி இசையும் கூட அருமை . மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த , எதார்த்தத்தை பிரதிபலிக்கிற அற்புதமான ஒரு பகடி. அவசியம் பார்க்க வேண்டிய படம்.
     

No comments:

Post a Comment