Monday, April 8, 2024

ஆடு ஜீவிதம் , இந்தியாவில் உருவாகிய ஒரு காஸ்ட் அவே அல்லது ஒரு ஷாஷங் ரிடம்ப்ஷன் மாதிரியோ வந்திருக்க வேண்டிய படம். ஐம்பதுக்கும் மேல் மறுபதிப்புகள் பதிக்கப்பட்ட , ஒரு புத்தகம். மனதை ஆட்டிப்படைக்கும் கதை , மனதோடு ஒட்ட மறுக்கிற சினிமாவாக மாறியது வேதனை! நஜிபின் அகதரிசனம் விரியும் இடமே இந்த கதையின் உயிர்நாடி அதையே கோட்டை விட்டிருக்கிறார்கள். நஜீபின் புறவய சிக்கல்களை , அடிவாங்கல்களை , ரத்தம் , பயம் , தனிமை போன்றவற்றை காட்டுகிறார்களே தவிர. நஜிபின் அகத்திற்குள் செல்ல காட்சியமைப்புகளோ , திரைக்கதையோ அதிகம் இடம் கொடுக்கவில்லை. காஸ்ட் அவேயை உதாரணம் காட்டாமலே இதை புரிய வைப்பது அவ்வளவு கடிணமாக காரியமல்ல. சிறிய இரண்டு உதாரணங்கள். நஜீப் பாலைவணத்தில் சிக்கி இதுதான் நமது வாழ்க்கை என மெல்ல மெல்ல துவண்டு போகும் தருனங்களை ஏதும் படம்காட்டப்படவில்லை. இது போல துவண்டுப்போவது எனபது அகம் உடையும் தருணத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது , அது எங்கே நடந்தது எனவே தெரியவில்லை. இதுவெல்லாம் காட்டமலேயே நஜிபூக்கு தாடி வளர்ந்துவிடுகிறது. படத்தின் முக்கியமான அம்சங்களை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் என கூறுவது போல் உள்ளது. இன்னொரு உதாரணம் , உண்மையக சவுதியில் இதுபோல மாட்டியவர்களின் பேட்டிகளை கண்டாலே தெரியும். அவர்களுக்கு இந்த தனிமை சிறையில் ஆடுகளுடன் இருக்கும் உறவு. கொடூர மனிதர்கள் , தனிமை சிறை , வாழ்க்கையின் முடிவே அவ்வளவுதான் எனும் நிலை இவற்றிற்கு நடுவே ஏதும் அறிந்திராத அந்த பிராணியின் ஒரு சிறு ஸ்பரிசம் , அதனுடன் பேசும் தருணங்கள் , அதனுடனேயே இருக்கும் வாழ்க்கை அதுதானே டைட்டில்? புத்தகத்தின் தலைப்பே அதுதான் , அதையும் கோட்டை விட்டு இருக்கிறார்கள் . புரியாத பாஷை , அன்னிய நிலம் என மனது உடைய தொடங்கும் ஒரு காட்சியில் ஆடுகள் கத்துவது போல ஒரு ஷாட் வந்திருக்கும். அது கிட்டதட்ட பேசுவது போலவே இருக்கும் , அந்த அந்த உயிர்ப்புள்ள காட்சியில் இருந்து வளர்த்தெடுக்காமல் மேலும் புறவய சிக்கல்களை காட்டுவதில் கவணம் செலுத்துகிறார்கள். இரண்டாம் பாதியில் தப்பிக்கும் தருணங்கள் , இயற்க்கை செய்யும் ட்ராமா என நல்ல நல்ல காட்சிகள் இருந்தாலும் வழக்கமான க்ளீஷேக்களாகவே தெரிந்தன. கடைசியில் ஸ்பான்ஸர் நஜிபை போலீசில் கண்டுகொண்டு போவதும் க்ளீஷேவாகவே இருந்தது. ரகுமானின் இசையில் பெரியோனே இசுலாமிய தத்துவயியலின் பக்கமே கொண்டு சென்று இருக்கிறது எனறால் மிகை இல்லை. மத்தபடி இசை ஓரளவுக்கு ஒகே. ஒளிப்பதிவு , கிரபிக்ஸ் காட்சிகள் அற்புதம் பதினைந்து ஆண்டுகளாக கடின உழைப்போடு ஒரு படத்தை எடுத்துஇருக்கிறார்கள். திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்

No comments:

Post a Comment