Tuesday, February 8, 2011

குழந்தை வளர்ப்பு

”நான் பாட்டுக்கு சொல்லிகிட்டே இருக்கேன், காது குடுத்து கேக்காம நீ பாட்டுக்கு செஞ்சுகிட்டே இருந்தின்னா என்ன அர்த்தம்... “ இது ஒரு குடும்பத்தில் மிகச்சாதரணமாக நிகழும் சச்சரவுகளில் கேட்கப்படும்  வசனம்... பெரும்பாலும் அக்குடும்பத்தில் உள்ள குழந்தையை , தாயோ அல்லது தந்தையோ அல்லது வேறு ஒரு குடும்ப உறுப்பினரோ சொல்வதாக அமையும்... விமர்சனங்கள் என்பது இங்கிருந்தே உருவாகி விடுகிறது... இது ஒரு குழந்தையின் நடத்தையை விமர்சனம் செய்வது.. அதற்க்கு அவர்களுக்கு உண்டான தகுதி அதற்கு முன் இந்த உலகத்தில் அந்த குழந்தை வாழ்ந்த சமூக கலாச்சார சூழலில் 25 வருடங்கள் வாழ்ந்தது,பலவித அனுபவங்களை பெற்றது இதெல்லாம்தான்.
இங்கு நாம் மிக முக்கியமாக கருத வேண்டியது மாறிவரும் சமுகச்சூழல்களைதான். அதை எதிர்கொள்ளப்போவது அந்த குழந்தைதானேயொழிய நாமல்ல. இன்றய காலகட்டத்தில் தொன்னுறு சதவிகித பெற்றோர்கள்  கால ஓட்டத்தில் சமுகமாற்றத்திலிருந்து விலகும் தன்மையுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அக்குழந்தை எந்த அளவுக்கு சமுகத்தை நெருங்குகிறதோ , சில பெற்றோர் அந்த அளவுக்கு விலகியும் போகிறார்கள். அவ்வாறு அந்த குழந்தை இந்த சமுகத்தை நெருங்குவதற்கான காலம் எது  என்று கேட்டால்.டீன் ஏஜ் எனப்படும் பதின் பருவ வயதில்தான்.


முக்கியமாக பல விமர்சனங்கள் இந்த வயதில் முன் வைக்கப்படும். இவ்வாறு விமர்சனம் செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை இரு பிரிவாக பிரிக்கலாம் ஒன்று சமூக மாற்றங்களை புரிந்து கொண்டவர்கள் இன்னொன்று சமூக மாற்றமடைகிறது என்ற பிரஞ்ஞயே இல்லாதவர்கள். (ஒருவகையில் இவர்கள் வாழ்வதும் கற்பனை உலகில்தான்).இவர்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப்போவதில்லை. நாம் பார்க்கப்போவது சமூக மாற்றங்களை புரிந்து கொள்பவர்க்ள் பற்றயே...

சரி எந்தமாதிரியான மாற்றங்கள்...

1.பொருளாதார மாற்றம்

2.ஆணாதிக்க  மனபான்மையின் பரினாம வளர்ச்சி

3.விஞ்ஞான வளர்ச்சி

இக்கால பெற்றோரும் கூட இவற்றையெல்லாம் மறுப்பவர்களா..?  என ஒரு கேள்வி எழலாம்... என்னுடய பதில்.ஆம் என்பதே.மறுக்கும் முறையோ அல்லது மறுக்கப்படும் விஷயங்களோ மாறி இருக்கலாம் ,ஆனால் மறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். சரி

1. ஒரு குழந்தை புத்தகத்தை கிழித்தால் கண்டிக்க கூடாதா என்றால் தாராளமாக... கண்டிக்க வேண்டிய விஷயம் , ஆனால் நாம் கண்டிக்கும் முறை “சாமி கண்னை குத்தும்..” என்பதாகவே அமையும். அந்த புத்தகத்தை படித்தால்தான் வேலைசெய்து  சம்பாதிக்க முடியும் என்பதை அந்த குழந்தைக்கு புரிய வைப்பதில்லை.. மாறாக குழந்தைக்கு அதெல்லாம் புரியாது என்று நாமே ஒதுக்கித்தள்ளிவிடுகிறோம்.

2.பத்து வயதில் பரிட்சையில் மதிப்பென் குறைவாக எடுத்தாலோ அல்லது தோல்வியை சந்தித்தாலோ ஒன்று கண்டிக்கிறோம் அல்லது அடிக்கிறோம் இல்லை அடுத்த பரிட்சையில்  ”நல்ல மார்க் வாங்கனும் என்று சொல்கிறோம்” அவ்வளவே.மதிப்பென் வாங்குவது இன்றய  கல்வி திட்ட அமைப்பின் படி அடுத்த படியான வாழ்வியல் முன்னேற்றத்திற்க்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை கூறுவதில்லை.. மாறாக குழந்தைக்கு அதெல்லாம் புரியாது என்று நாமே ஒதுக்கித்தள்ளிவிடுகிறோம்

3.பதிமூன்று வயதில் ஒரு குழந்தை சமுகத்தை நம்மைவிட வேகமாக நெருங்கும்பொழுது. அந்த வேகத்தை தடுக்க முயல்கிறோமே தவிர அது அவசியமான வேகமா இல்லையா என்பதை உணர மறுக்கிறோம். கேட்டால் இது ரெண்டுங்கட்டான் வயசு என்று நாமே ஒதுக்கித்தள்ளிவிடுகிறோம்.

பதிமூன்று வயது என்பது வாழ்வியல் உண்மைகளை தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கும் வயது. இனப்பெருக்கத்திற்க்கு தயாராகும் வயது. இந்த வயதில் உன்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆண்களின் நிலை மிக மோசம் , பெண்கள் எவ்வளவோ தேவலாம் போல. பெண்னுக்கு அவள் தாய் எல்லம் சொல்லிகொடுக்கிறாள் வெளியே  எப்படி செல்லவேண்டும் என்பதிலிருந்து குடும்பம் குழந்தை குட்டி பொறுப்பு  வரை கிட்டதட்ட எல்லாமே பதிணெட்டு வயதிற்குள் தெரிந்து விடுகிறது. அவள் பூரனமாக பக்குவம் அடைந்து விடுகிறாள்..  ஆண்களாகிய நாம்...?

கிட்டதட்ட நாம் எல்லோருமே பெண்களை ஒப்பிடுகையில் நாகரீக வளர்ச்சியில் பிந்தங்கியுள்ளதை மறுக்க முடியாது..  (உடனே ஆண்கள் சண்டைக்கு வரக்கூடாது , பெண்களை உசத்தி கூறூகிறேன் என்று... ) ஒரு கோணத்தில் இந்த பக்குவப்பட்ட அறிவு அவளுக்கு அவசியமாகிறது ஏனென்றால் பொருளாதாரம் , அரசியல் , கல்வி என்று எல்லா துறைகளிலும் ஆணாதிக்கமே நிரம்பி இருக்கிறது கல்வி அறிவு இல்லாத பெண்னாக இருந்தாலும்  ஆணைவிட அவளுக்கு வாழ்வியல் உண்மைகள் அதிகம் தெரிந்திருப்பதற்க்கு இந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பும் ஒரு காரணம் (உடனே ஆண்கள் பெருமைப்பட்டு கொள்ளவேண்டாம், அதே சமுதாய அமைப்பு ஆண்களை எங்கே கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது என்று இப்பொழுதுதான் பார்த்தோம்...)

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு

"child is a father of a man' என்பார்க்ள். அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு அவர்களை ஒவ்வொரு வயதிலும் மதித்து நல்லவைகளையும் கெட்டவைகளையும் பிரித்து பகுத்து அறிய  கற்றுகொடுத்தோமானால். நமது  மரபனு இந்த சமுதாயத்தில் நல்ல நிலையை அடைவதோடு மட்டுமல்லாமல். அடுத்த சந்ததிகளை சரியான பாதையை நோக்கி இட்டுச்செல்லும்.

"after all we all are  the prisoners of solar system"


Monday, January 31, 2011

மனமொத்து சேர மனமில்லை மனமொத்து பிரிய மனமிருக்கிறது.

பெயரளவில் ஜனனாயகம் இருக்கற இந்தியா,இலங்கை மாதிரியான நாடுளில் மக்களது நிலைமை எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த கல்யாணங்களுக்கு பிறகு வாழும் தம்பதிகளின் நிலமை... இந்துக்களின் திருமணங்களில் இந்த பெயரளிவிலான ஜனனாயகம் கடந்த சில நூற்றாண்டுகளாக இல்லாமலிருந்த்தது. ஆனால் மாறிக்கொண்டே வரும் சமுதாய அமைப்பின் ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க பிள்ளைகளின் சம்மதங்களை இக்காலத்தில் கேட்காமல் முடிவெடுப்பது குறைந்துள்ளது எனலாம்.

இனியும் சகித்துக்கொள்ள முடியாது என்றிருக்கும் நிலமையிலேயே விவாகரத்துகள் பெரும்பாலும் முளைக்கின்றன. அது கூட ஒருதரப்பு தர மறுத்து இன்னொரு தரப்பு கோரினால் மட்டுமே வாதங்கள் நடைபெறும். இல்லை இன்றால் மனமொத்து பிரிவது சாலச்சிறந்த்தது :-(  அப்பபொழுது விவாகரத்தென்பது ஒரு புள்ளிவிவரமாகும் அளவிலேயே முக்கியத்துவம் பெறும்.

இக்கால பெற்றோர்கள் முக்கியமாக அவர்கள் நிச்சயிக்கும் திருமணங்களில் முன்வைக்கும் வாதங்கள்

ரெண்டு பேரும் மீட் பன்னுங்க பேசுங்க என்பார்கள்..அதற்க்கு முன்ன்ரே இப்பெற்றோர்கள் பேசியிருப்பார்கள்.. ஒருவேளை ஜாதக பொறுத்தம் கூட பார்க்கப்பட்டிருக்கும்.
இரு பாலினரும் சந்தித்து பேச செல்லும்போதே முடிவாகிவிடும் சந்திப்பின் காரணம்.

ஒரு ஆணும் பென்னும் சந்திக்கும் காரணத்தை மூன்றாமவர்கள் முடிவு செய்யும் போதே தலையீடு ஆரம்பித்து விடுகிறது. மூன்றமவர்கள் என்று குறிப்பிட்டது இங்கு பெற்றோர்களையே. இந்த சந்திப்பு சிலருக்கு எரிசலை உண்டு பன்னலாம், பலருக்கு தரும சங்கடங்களையும், சிலருக்கு மகிழ்ச்சியையும் கூட உண்டு பன்னலாம்.

என்னை மாதிரி சிரியஸ் ஆசாமிகளுக்கு. சடங்கு சம்பிரதாயங்களை உண்டு பன்னியவர்கள் மீதும் ஆணாதிக்க சமுதாயத்தின் மீதும்  எரிச்சல் தான் வரும்,கூடவே அப்பெண்னின் மீது ஒரு பரிதாபமும் வரும்.
ஆனால் பெரும்பான்மையான திருமணங்களை பெண்னின் கோணத்திலிருந்து பார்த்தால் அவர்கள் சுதந்திரத்தை பறிக்கவே செய்கிறது. இது பெற்றோர் பார்க்கும் திருமணங்களின்பொழுது மட்டுமல்ல , காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் பொருந்தும் . அவர்கள் காதலிக்கும் காலத்திலுருந்தே ஆணாதிக்கம் தொடங்க்கி விடுகிறது. நான் பார்த்தவரை, கேட்டவரை, படித்தவரை காதலிக்கும் காலத்தில் உருப்படியாக யாரும் பேசிக்கொள்வதில்லை மூக்கால்வாசி நேரம் தன்னை வேறோர் ஆசாமியாய் பிரகடன படுத்திக்கொள்வதிலும் , தன் காதலரை ஊரில் இதுவரை பார்க்காத கற்பனை கதாபாத்திரமாக பார்ப்பதிலுமே நேரம் வீணடிக்கப்படுகிறது இது இரு பாலருக்கும் பொருந்தும்.

காரணம் பெண்ணின் நிலைமையும் தேவையும் ஆணுக்கு புரிவதில்லை.
பல சிந்தனைகளுக்கு பிறகு எடுத்த முடிவாதல்லாலும் , இருக்கிற ஆண்களில் எது சிறந்ததோ அதை சீக்கிரம் தேர்ந்தெடுக்க வேண்டியதாலும் பெண்ணுக்கு வேறு வழியில்லை.

ஆறறிவுடன் மனித ஆண் பெண் இருவரும் தாமாக தேர்ந்தெடுக்கும் முறைகளிலேயே  இவ்வளவு குழப்பமென்றால்.... மூன்றாமவர் தேர்ந்தெடுத்து கொடுத்தால் வரும் குழப்பங்களுக்கு பஞ்சமே இல்லை. அறிவார்ந்தவர்கள் எவ்வகை திருமணமானாலும் அதுவொரு சமூக  ஒப்பந்தமெனக் கொள்வர். அது ஒரு கலாச்சார மாற்றமென்றோ,கடவுள் நிச்சயித்த பந்தமென்றோ சொர்க்கத்தில் நிச்சயிக்கபட்டதென்றோ கொண்டால் விளைவுகளை சந்திக்க தயாராக வேண்டும். சமூக புரிதலற்று செய்யும் செயல்கள் எதுவாக இருப்பினும் செயலின் முடிவுகள் ஏன் இப்படி இருக்கிறது என்று தெரிய கூட வாய்ப்பிலாமல் போய்விடும். (இங்கே விளைவுகள் என சுட்டப்படுவது கண்டிப்பாக  விவாகரத்தை அல்ல , பிரச்சனைகளைதான்)