Tuesday, December 11, 2012

coin collection (shot story)


அந்த கிராமத்து ரோட்டில் ஒரு , இனோவா கார் சடாரென பறந்து வந்து அந்த வண்டிக்கடையின் முன்  நின்றது. வண்டிக்கடையில் கடலை விற்க்கும் சிறுவன் யாரது என்று காரையே உற்று கவணித்து கொன்டிருந்தான். அதிலிருந்து இரண்டு நடுத்திர வயது தம்பதியினர் இறங்கினர் , இறங்கும்போதே உள்ளே பின் சீட்டில் ஒரு 6 வயது பையன்  தூங்கிக்கொண்டு இருப்பது  தெரிந்தது.

"ஒரு வழியா கடலை கடையை கண்டு புடிச்சாச்சுமா. முந்தாநேத்து ஏற்போர்ட்ல இறங்கினதுலேந்து கேட்டுட்டே இருந்தியே... வி ஜஸ்ட் ஹேட் நோடைம் இவன் டு டர்ன் பேக்... ஃபைனலி வி ஃபெளன்ட் அவுட்.. "  என்றார் கணவர்.

"தேங்ஸ் ,  பட்  நான் கேட்டது சித்துக்குதான் , ஹி ஜஸ்ட் லவ்ஸ் த டெஸ்ட்... எழுப்பவேண்டாம் வி வில் பை ஃபார் ஹிம் “ என்றாள் மனைவி.

கடைக்கரபையனை பார்த்து மூன்று பொட்டலங்கள் தரும்படியும் ஒன்றை கவரில் போட்டு தரும்படியும் கணவர் கூறினார்.

“சற்று நேரத்தில் இந்தங்க சார்  .. ” என்று மூன்றையும் நீட்டீனான் பையன்.

எவ்வளவு என்று கேட்டதற்க்கு பையன் 15 ரூபாய் என  கூறினான்.

தன் பர்சை திறந்து பார்த்த அவரின்  முகம் சற்று கடு கடு வென ஆகியது ,    சுத்தமாக சில்லறை இல்லாததுதான் அதற்க்கு காரணம். மனைவியை நோக்கி "நேத்து ஏர்போர்ட்லேந்து வந்த உடனே கொஞ்சம் சில்லறை மாத்தி வைனு  சொன்னேன்ல , நெள ஐ ஹேவ் ஜுஸ்ட் எ டூ ருப்பி காய்ன் ரெஸ்ட் ஆர்  பைவ் ஹன்ரட்ஸ் , என்ன பன்ன சொல்லு ..."என்று சற்று கடுப்பாகவே கேட்டார்.

அதற்க்கு அவர் மனைவி சற்று தயக்கத்துடன் " ஆக்ச்சுவலி நான் சில்ற மாத்தி வச்சேன் , எடுத்துட்டு வர மறந்துட்டேன் , எதுக்கும் என் ஹேன்பேக்ல பாருங்க தேர் வில் பி சம் சேஞ்... "  கணவர் உடனே காருக்குள் சென்று ஹேன்ட்பேக்கை தேடினார்..

"எங்க  ,  உன் சீட்டில் ஹேண்ட் பேக்கை காணும் அதையும் மறந்து வச்சுட்டியா.."என உள்ளிருந்து கணவர் கேட்க.

"இல்ல இல்ல  , சித்து ஏதோ அவனோட  கலெக்ஷன் பாக்ஸ் வைக்கனும்னு ஹேண்ட் பேக்கை வாங்கினான் .. ஜஸ்ட் ஸீ பை ஹிஸ் ஸைட்.." என்றாள் மனைவி.


பின் சீட்டில் அந்த ஆறு வயது பையன் பேக்கை கையுடன் சேர்த்து வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான்.  அவனிடம் இருந்து பேக்கை மெள்ள எடுத்து திறந்து பார்த்தார்  . ஒரு பத்து ருபாய் காய்னும் ஒரு ஐந்து ரூபாய் நோட்டும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு . பேக்கை மறுபடியும் பின் சீட்டில் வைத்துவிட்டு மனைவியிடம்  இருந்து கடலை பொட்டலத்தை வாங்கி ,  கொஞ்ச நேரம் இருவரும் கார் பக்கதில் நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்திற்க்கு பிறகு கடைக்கார பையனுக்கு காசை கொடுத்துவிட்டு மனவியை நோக்கி ..
"சரி   கிளம்பலாமா.. இங்கயே கடலை சாப்பிட்டு லேட் பன்னிட்டா அப்புறம் நடை சாத்திருவாங்க... வடமாலை போட்டு அர்ச்னையெல்லாம் வேற பன்ன சொல்லிருக்கோம். அர்ச்சனைக்கு  முன்னாடி நாம அங்க இருக்கனும்  இட்ஸ் கெட்டிங் லேட்.. போற வழில சாப்டுக்கலாம் கெட் இன் , கெட் இன்" என அவசரமானார் கணவர் . மனைவியும் உள்ளே ஏறினார்.  பின்பு ஜன்னலின் வழியாக கடைக்கார பையனை பார்த்து உலகளந்த பெருமாள் கோவிலுக்கு எப்படி போவது எனகேட்டார்.

"இதே ரோட்டில் நேரா  ஒரு 10 கிலோ மீட்டர் போனா , வலது பக்கம்  ஒரு சர்ச் வரும் , அங்கிருத்து பக்கம்தான் கேட்டிங்கனா சொல்லிடுவாங்க" என்றான் கடைக்காரப்பையன். காரில் இருந்தபடியே தேங்ஸ் என கூறிவிட்டு சாவியை போட . கண நேரத்தில்  இனோவா கார் பறந்து சென்றது.பையன் காரையே மறையும் வரை பார்த்து கொண்டு இருந்தான். பின்பு வண்டியை தள்ளிக்கொண்டே பக்கத்தில் இருக்கும் டீ கடை ஹோட்டலுக்கு  வேகமாக நடந்தான். கடை வாசலில் போர்டில் விலைபட்டியல் இருந்தது. அதில் 15 என்கிற நம்பர் ஒரு செட் பரோட்டா என்பதர்க்கு நேராக இருந்தது.அதை பார்த்து மனதில் பதிய வைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

உள்ளே உட்கார்ந்துகொண்டு
"ஒரு செட் பரோட்டா கொடுங்கன்னே... "என்று இவன் கேட்க .சிறிது நேரத்தில் ஒரு செட் பரோட்டா தட்டில்  வழங்கப்பட்டது.

பசியில் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான் பையன். பின்பு  

"எவ்ளோ.. ? "  என்றான் தெரியாதது போல.

"பதினஞ்சு ரூபாப்பா அதான் போர்ட்ல பாத்தியல்ல .. " என்றார் ஓனர்.

"இல்ல இல்ல மறந்துட்டேன் என்று சமாளித்துக்கொண்டே , தன் வண்டிக்கு சென்று டப்பாவிலிருந்து பத்து ரூபாய் காய்னையும் ஐந்து ரூபாய் நோட்டையும் எடுத்து டீக்கடை ஓனரிடம் கொடுத்தான்.  பின்பு பையன் பழய இடதிற்க்கு தன் கடலை வண்டியை தள்ளிக்கொன்டே போனான்..

சிறிது நேரத்திற்கெல்லாம் பையனின் வண்டிக்கடைக்கு அதே இனோவா கார் போன வேகத்தை விட அதிவேகமாக  திருப்பி பறந்து வந்து நின்றது.. பின் சீட்டில் அப்போது தூங்கிக்கொண்டிருந்த அந்த சிறுவன் தன் அப்பாவுடன் வண்டியிலிருந்து இறங்கினான்.  அவசரமாக குதித்தான் என்றே சொல்லவேண்டும் . அவன் வேறு ஏதோ சிந்தனையில் இருப்பது போல் இருந்தது  பத்தாதற்க்கு  மூஞ்சி வேறு  வீங்கி போய் கண்ணெல்லாம் சிவந்து இருந்தது. பெரியதாக அழுதிருப்பான் போல் தெரிந்தது. அவனை கூட்டிகொண்டு , சிறுவனின் அப்பா மட்டும் வண்டிக்கார பையனிடம் வந்தார்.


"தம்பி கொஞ்ச நேரம் முன்னாடி உன் கடைல வந்து கடலை வாங்கிட்டு  போனேன் ஞாபகமிருக்கா … " எனக் கேட்டு நிறுத்தினார்.

ஏற்கனவே  , திரும்பி வந்த கார் , கண்ணம் வீங்கி கண் சிவந்த  சிறுவன் , இந்த காட்சிகளை பார்த்து  குழம்பி இருந்த வண்டிக்கார பையன் , அவர் கேட்ட கேள்விக்கு தலையை மட்டும் ஆட்டி ஆமாம் என பதில் சொன்னான்.

"நான் கொடுத்த 15 ரூபால  ஒரு 10 ரூபா காய்ன் இருந்துச்சு இல்ல அது என்  பையனோடது .அக்சுவலா  அவன் எல்லா கன்ட்ரி கரன்சிலேந்தும்  காய்ன்ஸ்  மட்டும் கலெக்ட்பன்னி வெப்பான் . அது அவனோட ஹாபி . அந்த காய்ன் பாக்ஸ ஹேன்ட் பேக்ல வச்சுருந்தான் போல  நான் சரியா கவனிக்கல . இன்டியன் காய்ன்ஸ்லேந்து நேத்துதான் பர்ஸ்ட் டைம் கலக்ட் பன்னிருக்கான், அதான் அந்த 10 ரூபாய் காய்ன் . அது   தெரியாம அத நான் உன் கிட்ட கொடுத்துட்டேன். பையன்  முழிச்சு  பாக்ஸ் திறந்து பாத்துட்டு காய்ன்  இல்லைன்னதும் கண்டிப்பா வேனும்னு அடம் புடிச்சு அழ ஆரம்பிச்சிட்டான்.  அதான் பாதி வழியலயே ரிட்டர்ன் ஆயிட்டோம்.உன்கிட்ட அந்த காய்ன் இப்ப  இருக்குல .. இப் யூ டோன் மைன்ட் , அதுக்கு பதிலா நான் சேஞ் மாத்தி ரூபா தந்துடறேன்.. கொஞ்சம் அத மட்டும் பாத்து தரயா ? " என கேட்டார்.


வண்டிக்கடைகார பையனுக்கு அவர் கூறியது பாதி புரியவில்லை... இருப்பினும் இவர்களுக்கு ஒரு 10 ரூபாய் காய்ன் தேவை  என மட்டும்  புரிந்து கொண்டான். சிறுவனை பார்த்தால் பாவமாக  இருந்தது. இருந்தாலும் என்ன செய்ய

"இப்பதான் சார் ,  பக்கத்து டீக்கடையில  அந்த காசுல சாப்டேன் ... என் கிட்ட வேற பத்து ரூபா காய்ன் இருந்தா கூட தந்துடுவேன் ஆனா இல்லயே, என்று கூறி தன் சில்லறை டப்பாவை காட்டினான்... "
அந்த  டப்பாவில் சில  இந்திய காய்ன்களை பார்ததும் சிறுவனுக்கு வருத்தம் மேலும் பன்மடங்கு ஆகியது.கடைக்கார பையன் வேறு இவ்வாறு  சொன்னதும்  அப்பா தன் மகனை ஒரு பார்வை பார்த்தார், அவருக்கு புரிந்து விட்டது , அவன் கண்ணில் வேறு தண்ணீர் முட்டிக்கொண்டு  இருந்தது. எனவே அவர் , வண்டிக்கார பையனையும் தன்னோடு வரும்படி   கூட்டிக்கொண்டு  தன் மனைவியுடன்  , டீக்கடைக்கு சென்று  விவரத்தை டீக்கடை ஓனருக்கு சொன்னார்.


அவர் தனது சில்லறை டப்பாவை சிறிது நேரம் குலுக்கி  பார்த்துவிட்டு , ஏதோ ஞாபகம் வந்தவராய்
" அடடே.. இப்பதான் எதிர்த்த கடை நாயுடு சில்லறை வேனும்னு வந்து கேட்டார் நூறு ருபாய்க்கு மாத்தி கொடுக்கும்போது அந்த காய்னையும் சேர்த்து கொடுத்துட்டேன் இப்பதான் ஞாபகம் வருது  " என்றார்.
ஓனர் இப்படி சொல்ல  கேட்டதும் , அப்பா சிறுவனின் பக்கம் திரும்பி   தரிசனத்திற்க்கு டைம் ஆகிக்கொண்டிருக்கிறது நாளைக்கு  சென்னைக்கு போன பின்பு பார்த்துகொள்ளலாம் என பத்தாவது முறையாக , சொல்லிப்பார்த்தார் பிரயோஜனமில்லை. ஏற்கனவே வருத்தத்தில் இருந்தவனது  கண்களில் இருந்து  உப்பு தண்ணீர் குபு குபுவென்று மறுபடியும் வந்தது . பத்தாதற்க்கு அம்மாவை பார்த்து பரிதாபமாக அவள் கையை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். வேறு வழியில்லாமல் வண்டிக்கடை பையனை அனுப்பிவிட்டு . டீக்கடை ஓனரை  கூட்டிக்கொண்டு எதிரிலிருக்கும் நாயுடுவின் கடைக்கு சென்று அப்பா  விபரத்தை சொனனார் .

அதற்க்கு நாயுடு
"அச்சச்சோ ,  இப்புடுதான் நம்ம தெரு முனை பிள்ளையார் கோவில்ல போய் கும்பிட்டுட்டு அர்ச்சகர் தட்டுல  அதை போட்டிட்டு வந்தேன். தானிக்குதான்  சில்லறை வேனும்னு  சொல்லி  டீக்கடைல  வாங்கினேன் …  இஎஉங்க வேற அது மாதிரி உந்தானு பாக்கறேன் "என்றவர் பார்த்டுவிட்டு இல்லையன கூறிவிட்டார்.அவரிடம் இருந்த சில்லறைகலை பையன் எட்டி பார்த்து கொண்டிருந்தான் .ஒரவ்வொரு முறை இந்திய காய்ன்களை பார்க்கும்போதும் சிறுவனுக்கு வருத்தம் அதிகமாகிக்கொண்டு  சென்றது .

கடைக்கார நாயுடு இவ்வாறு கூரியதை கேட்ட , அப்பா மறுமுறை  பையனை திரும்பி பார்த்தார் , பையன் அம்மாவை பார்த்தான் . பையன் விடாப்பிடியாக இருப்பதை அவன் பார்வையிலேயே அப்பா  தெரிந்து கொண்டார். சரி கடைசியாக இதையும் பார்த்துவிடலாம் என்று நாயுடுவிற்க்கும் , டீக்கடை காரருக்கும் நன்றி சொல்லிவிட்டு சிறுவனுடன்  பெற்றோர் இருவரும் தெருமுனையிலிருக்கும்  பிள்ளையார் கோவிலுக்கு செனறனர் . அங்கே தேமே என்று அர்ச்சகர்  ஒருவர் உட்கார்ந்து இருந்தார் அவருக்கு சற்று தூரத்தில் முடமாக , தலை பரட்டையாக ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்துகொண்டு இருந்தான் அவர்களது நான்கு கண்களிலும்  கோவிலுக்கு யாரும் வரவில்லையே என்கிற ஏக்கம்  தெரிந்தது .


இவர்கள் கோவிலை நோக்கி வருவதை பார்த்ததும் அர்ச்சகர்  கிடு கிடுவென்று உள்ளே  தாம்பாளம் சகிதமாய்  செல்லப்போனார்.சிறுவனின் அப்பா அவரை கைத்தட்டி  ஒரு நிமிடம் வருமாறு அழைத்தார் . பின்பு முழு விவரைத்தையும் அர்ச்சகரிடம் கூறினார். அதைக்கேட்ட அர்ச்சகர்.

"காய்ன் அந்த தாம்பாளத்துலதான்  இருக்கும்   கொடுக்கறத பத்தி ஒன்னுமில்ல  பகவானுக்கு காணிக்கை செலுத்தினதை திருப்பக் கேக்கறதுங்கறது சரியா இருக்குமோ...."என்றார்.அவர் உள்ளகிடக்கையை புரிந்துகொண்ட பையனின் அப்பா,.  "பையன் பேர்ல வேனும்னா ஒரு அர்ச்சனை பன்னிடலாம், அதுக்கு நான் காணிக்கை தந்துடறேன்" என சூசகமாக பேசிப்பார்த்தார்
"சே சே அதுக்காக  சொல்லல , இதுல என்ன இருக்கு   குழந்தையும் தெய்வமும் ஒன்னும்பா . ஏதோ தெரியாம விழுந்துர்த்துங்றேள் பரவாயில்ல , பையன் பேரு , நக்ஷ்த்திரம் எல்லாம் சொல்லிடுங்கோ அர்ச்சனை பன்னிடுவோம் " என  மிக விரைவில்  படிந்தார் அர்ச்சகர்..
பையனுடைய அம்மா "கார்த்திகை , ரிஷபம் , பேரு சித்தார்த்"  என்று என்று கூறினாள் . அப்பா அர்ச்சனை சாமான் வாங்குவதற்க்கு அர்ச்சகரிடம் பணத்தை கொடுத்தார் .
உடனே அர்ச்சகர் பக்கத்து கடைக்கு சென்று ஒரு முழம் பூ, தேங்காய் ,கற்பூரம் , கூடை  , குங்குமம் , எல்லாத்தையும் வங்கிக்கொண்டு  வந்து பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து முடித்தார். உள்ளிருந்து வரும்ப்போது தேங்காய் பூ கூடையுடன்   ஒரு தாம்பாளாத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார் .  அதிலே அப்போது வரையான அவரது  சம்பாத்யம் இருந்தது. அதிலிருந்த சில்லறைகளை ஆராய தொடங்கினார் . இந்த முறை இந்த டப்பாவை பார்க்கும்போது , அர்ச்சகர் முன்னமே இருக்கிறதென சொல்லிவிட்டதால் சிறுவன் சந்தோஷமாக இருந்தான் . அர்ச்சகர் அதிலிருந்த அந்த பத்து ரூபாய் காய்னை எடுத்து பையனிடம் கொடுத்தார் .

அதை பார்த்த பையன் முகத்தில் சந்தோஷம் தாளவில்லை ஆனந்தமாக அதை வாங்கிக்கொண்டான். மூவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
அப்போழுது அங்கு உட்கார்ந்து இருந்த  பிச்சைகாரன்   "சாமீமீ மீ........" என்று பாவமாக அழைத்தான்.  அர்ச்சகர்  சில்லறை டப்பாவை  திறந்ததிலிருந்து பிச்சைகாரனுடைய  கவனமும் பையனைப்போல் சில்லறையில்தான்  இருந்தது .சிறுவனின் அப்பா தன் பர்சில் இருந்த இரண்டு ரூபாய் சில்லறையை எடுத்து அவனுக்கு போட்டார். அவன் அதை தன்னுடைய டப்பாவில் சேர்த்துவைத்துக்கொண்டு நன்றி கூறினான்.

சிறிது தூரம் காரை நோக்கி முவரும் நடந்து சென்றனர். அப்போது பையன் அப்பாவை பார்த்து.
"இந்த ஊர்ல எல்லாரும் காய்ன் கலெக்ட் பன்றாங்களாப்பா .. எல்லாரும் காய்ன்ஸ என்ன மாதிரியே  டப்பாவுல போட்டு வச்சுருக்காங்க … ?? " என கேட்டான் மழலை மாறாமல்.

"ஷட் அப் சித்து .. வி ஆர் அல்ரெடி லேட் கெட் இன் டு த கார் குயிக்லி.." என ஆடரினார் அப்பா.








No comments:

Post a Comment